தேவதையின் நாட்குறிப்பு..(3 )

சில நிமிடங்களுக்கு
தண்ணீர் கொஞ்சம் புண்ணியம்
தேடிக்கொண்டது..
பிறகு
நீ அன்றலர்ந்த தாமரை (ரோஜா ?)
போல் வெளியே வருகிறாய்..
ஆமாம் ...ஆடைகளை
கலைத்து போடும் கலையை
நீ எங்கு படித்தாய்..?
அந்த பச்சை நிற தாவணியை
எடுத்து விட்டு புன்னகைக்கிறாய்...
மற்ற தாவணிகள் அழுவது
தெரியாமல்...
(தொடரும்..)

எழுதியவர் : ஆனந்த பிரபு.கௌ (18-Mar-11, 2:54 am)
சேர்த்தது : ANANDHA PRABHU
பார்வை : 304

மேலே