தேவதையின் நாட்குறிப்பு..(2 )

பிறகு..
உன் காலருகில்
விளையாடும் நாய் குட்டியை
அள்ளி எடுத்து முத்தமிடுகிறாய்..
உன் முத்தத்தை பெற்றுவிட்ட
மகிழ்ச்சியில் அவர்
இகழ்ச்சியான புன்னகையில்
என்னை தாண்டி போகிறார்...
பின்
நீ குளியலறைக்குள் போய்
விட்டாய்..
நீ நீராடுகிற போது
அந்த நீர் எழுப்புகிற சங்கீத
சப்தங்களை கொண்டு
சில இசை பேழைகள் வெளியிடுகிற
யோசனை எனக்குண்டு,..
எனக்கு தெரிந்து தனக்குதானே
நீர் அபிசேகம் செய்து கொள்ளும்
அம்மன் நீ மட்டும் தான்...(தொடரும்..)

எழுதியவர் : ஆனந்த பிரபு. கௌ (18-Mar-11, 2:47 am)
சேர்த்தது : ANANDHA PRABHU
பார்வை : 299

மேலே