தேவதையின் நாட்குறிப்பு..(1 )
பூமியின் மீது பனித்துகள்கள்
பாசமிகு மனைவியை போல்
படிந்து கிடக்க
பௌர்ணமி நிலவொன்று
போர்வையினுள் படுத்துறங்குகிறது ....
அழைக்கிற அலாரத்தை
அழகிய விரல்களால் அணைத்து விட்டு
துயில் எழுகிறது தூங்கிய மயில்..
சில் என்று சிரிக்கிற நீரை அள்ளி
தன் பூமுகத்தில் தெளித்து
நிமிர்கிறது அந்த பூந்தளிர்..
கைகளை உயர்த்தி
விரல்களை நெரித்து
நீ எடுக்கிற சோம்பலில்
சுவற்றில் தொங்குகிற
மோனலிசா முகத்தை மூடிக்கொண்டாள்...
பற்பசையை பல்துலக்கியில்
அளவாய் வைத்து
உன் முத்து பற்களை பட்டும் படாமல்
தேய்த்து நீ உமிழ்கிறாய்...
உன் வெட்கம் தான் கோலமிடுமேன்றால்
நீ உமிழ்கிற எச்சிலும் கோலமொன்றை
வைத்து விட்டு போகிறது.... (தொடரும்...)