ஏக்கம்
புத்தகச்சுமை முதுகிலும்
உணவுக்கூடை கையிலுமாய்
காலை வேலைகளில்
சாலை கடக்கும்
வயதொத்த சிறார்களைக் காணும்
நடைபாதை சிறார்களின்
ஏக்கமிகு கண்களுக்குள்
புதைந்து கொண்டிருக்கிறது
பாரதியின் பெருங்கனவும்
கர்மவீரரின் பெருமுயற்சியும் .......