உறவுகள்

உறவில்லாமல் உலகம் இல்லை .......

இருவேறு உடலும் இருவேறு உயிரும்
மனசும் உறவு கொள்வது காதல் .....

நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்
இவையனைத்தும் தன் சக்தியை வெளிபடுத்த
கொண்ட உறவு உலகம் ......

உயிருக்குள் உயிராய் உருவெடுத்து
முகத்தின் முகப்பு தோன்றிட
பாசமாய் கொண்ட உறவு பெற்றோர்கள்.....

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
குட்டி குட்டி குறும்புகள் செய்து
திட்டி தீர்த்துக்கொள்ள கூடிய உறவு சகோதரி .......

உண்மைக்கு உன்னதமான ஒருவனும்
தாய்க்கு நிகரான ஒருத்தியும்
சேர்ந்திருக்கும் உறவு நட்பு .....

உறவுகள் மலர வாழு !!!

எழுதியவர் : முத்துப் பிரதீப் (1-Aug-14, 4:19 pm)
Tanglish : uravukal
பார்வை : 452

மேலே