குக்கூ
என்ன ஆச்சுதோ ஏது நடந்ததோ
எண்ணமெல்லாம் உன்னை சுத்துதே
வயலுக்கு தண்ணி பாய்ச்சி
வளந்த நெல்லு பாத்து அசந்து போனேன்
வந்த மச்சான் வம்புக்கிழுத்து
வாயடச்சும் தான் போனேன்...
வேட்டி நீயும் கட்டிக்கிட்டு
வீரனாக வந்து நின்னா
வேண்டியதை நான் தருவேன்
வெக்கம் வந்து கொல்லுதடீ...
வெளஞ்ச நாத்து வளைஞ்சு போச்சு
வடிச்ச சோறும் கொளஞ்சு போச்சு
வெட்டித் தனமா உன்ன நெனச்சு
வெதும்பித் தான் மனசும் போச்சு...
வக்கனையா ஆக்கி வெச்ச
வத்திப் போன மீன் கொழம்பும்
வயிறார கொட்டிக்கோ நீ
வந்து புட்ட, இன்னும் என்ன?
வெட்டி தண்டம் வெங்காயம் நீ
வெதச்சுப்புட்ட உன் நெனப்ப மட்டும்
வெளுத்துப் போன எம் மனசும்
வெதும்பித் தான் போனதைய்யா...
கூட்டுக்குள்ள அடைஞ்சு கெடந்தேன்
கூவி கூவி கெடுத்துப்புட்ட
கூடு தாண்டி வானம் பாத்தா
கொமட்டிக்கிட்டு பதருதைய்யா...
கை பிடிச்சு கூட்டிப் போ நீயும்
கைத்தாங்கலா சேர்த்துக்கோ
கடல் அலையில கவுந்துராம
கரை சேர வழி பார்த்துக்கோ...