+மண்ணில் தவழும் என் மடி மீன்+
![](https://eluthu.com/images/loading.gif)
மண்ணில் தவழும் என் மடி மீன்
மனதைத் தழுவும் அவன் நகை காண்
கண்ணை மயக்க வைக்கும் அவன் எழிலே
என்னை மறக்க வைக்கும் அவன் ஒயிலே
சின்ன உருவம் கொண்டே எனை ஜெயித்தான்
வண்ணம் மனதில் தந்தே எனை ரசித்தான்
மனதில் தினமும் நடக்கும் அவன் ஆட்சி
வென்று சிரிக்கும் அவனே இதன் சாட்சி