சுமையை சுகமாய் சுமந்தவளுக்கு

என் கண்ணீரை விருந்தாக்குகிறேன்
கருவரையில் எனை சுமந்தவளுக்கு

இதை விட அரிது என்னிடம் இல்லை
அவளுக்கு அர்பணிக்க

அரிதான அமிர்தத்தை ஆராய்ந்து
அர்பணித்தாலும் அதை
எனக்கே படபை்பாள் நான் உண்டு மகிழ

அதனால் தான் கண்ணீரை
காணிக்கை ஆக்கினேன்
நிச்சயம் மறுக்க மாட்டால்
ஏன்என்றால்
என் கண் கலங்கும் என்று

என் கண்ணில் தூசி பளுவால்
வியர்வை விட்டனே் என்றால்

அவள் இமை முடியை சுனாமி
அலையால் தூக்கி எறிவாள்
கலங்கிய கருவிழியால்

எனக்கே எல்லாம் செய்தவள்
தனக்கு ஒன்றுமில்லை என்று
எண்ண கூட தெரியாதவள்

இயற்கையை எதிர்த்து இருந்தாள்
அவள் இறந்தாள்
என் இருதயம் இடிந்து விடும் என்று

வேறு என்ன தரமுடியும் என் கண்ணீரை தவிர என் சுமையை சுகமாய் சுமந்தவளுக்கு

எழுதியவர் : கிருஷ்னா (2-Aug-14, 11:27 pm)
பார்வை : 321

மேலே