வாச நட்பு

நீரடிக்கும் நதிக்கரையின் தன்மை கொண்டு
ஏரடித்து மனமுழுகும் நேர்மை கொண்டு
...போரடித்துத் தீதகற்றும் கலைகள் கொண்டு
...கூரடித்துக் குன்றிருத்த வருமே நட்பு !

வருகைதனின் நோக்கமதில் வளமை, இன்னும்
வறுமைதனில் கைப்பிடிக்கும் எளிமை எண்ணம்,
...குருவறிந்து நன்மைதனைக் காட்டும் திண்ணம்,
...குறிப்பறிந்து, உண்மையெனில் கொள்தல் நட்பு !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (3-Aug-14, 6:07 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 117

புதிய படைப்புகள்

மேலே