இயற்கையின் அழகு மனிதனின் அழகு 555

அழகு...

வானுயர்ந்த
மலைகளும் அழகு...

அதில் ஓடி விளையாடும்
விலங்குகளும் அழகு...

கீயே விழும்
அருவியும் அழகு...

விழுந்தாலும் நதியாய் ஓடும்
ஆறும் அழகு...

சுட்டெரித்தாலும் காலைநேர
கதிரவனும் அழகு...

மாலைநேர
கதிரவனும் அழகு...

தேய்ந்து வளர்ந்தாலும்
பௌர்ணமி நிலவும் அழகு...

பிறை நிலவும்
அழகு...

ஓயாமல் ஓசை எழுப்பினாலும்
கடல் அலைகளும் அழகு...

கடலும் அழகு...

விண்ணில் இருந்தாலும்
வெண்மேகமும் அழகு...

கருத்திருக்கும்
கார்மேகமும் அழகு...

ஆற்றோரம் வளரும்
நாணலும் அழகு...

பூத்து குலுங்கும்
கொடி மலரும் அழகு...

இயற்கை தந்ததை ரசிப்பது
மட்டும் மனிதன் அழகில்லை...

இயற்கையை பாதுகாப்பதுதான்
மனிதனின் அழகு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Aug-14, 9:39 pm)
பார்வை : 2422

மேலே