காத்து இருப்பேன்....
அன்று அர்ஜுனனுக்கு தேர் ஓடியாக இருதான் கிருஷ்ணன்,என் வாழ்கைக்கு நீர் ஊற்றியாக இருதார் கிருஷ்ணமுர்த்தி....
என் தந்தையே உன்னுள் நான் கண்டேன் தாயை
நீ தாலாட்டும் தந்து தலைமேல் தங்கினாய் இந்த தலைமகனை....
நடை பழகிக்கினாய்,நடைவண்டியும் பழகிக்கினாய் பள்ளி செல்ல பாதையும் காட்டினாய் பங்கமில்ல பாசமமும் தந்தாய்....
நீயும், தாயும் உலகம் என்று இருதேன்,என்னோடு கை சேர்க்க தங்கை எனும் பாசமலர் ஒன்றையும் தந்தாய்....
காலங்கள் கடந்தன பள்ளியும் முடிந்தது என் வாழ்கை பயணமும் தொடங்கியது...
தோளுக்கு மேல் வளர்த்தால் தோழன் என்பார்கள் அதனால் தான் என்னவோ என்னை தொலைவில் வைத்து பார்த்தாயோ....
உன்னோடு இருக்கும் நேரங்கள் குறைந்தன,வாழ்க்கையின் வலி கண்டதால் என்னவோ உன் மீதி இருக்கும் மதிப்போ உயர்ந்தது கொண்டே இருந்தது...
தொலை துரத்தில் நான் தொலைபேசி தொடர்புகளுடனும் துலைந்து போன மகிழ்ச்சியுடன் இங்கு நான்...
உன் வெள்ளி விழா மணநாள் காண மகிழ்ச்சியுடன் காத்து இருந்தேன்
கண்டேன் உன்னை
மணக்கோலத்தில் அல்ல மரண கோலத்தில்...
உன்ன மணக்கோலத்தில் அள்ளியணைக்க எண்ணி இருதேன்
மரணகோலத்தில் கூட உன்னை அணைக்க முடியாத அளவுக்கு
என் கைகளை உடைத்துவிட்டான் அந்த கடவுள்....
இது விதியின் விளையாட்டா அல்லது
வாழ்கையில் நீ போராட தரும் பயிற்சியா???
உன் நினைவில் நீ விட்டு சென்ற பணியை தொடரும் நான் பிறப்பாய் நீ என் மகனாக என்ற நம்பிகையோடு காத்து இருப்பேன்....