அலையென வருவாயடி - மணியன்

வந்து தழுவும்
வாடைக் காற்றும்
வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுதடி. . . . . .

ஓடித்திரிந்த கால்கள்
ஓரடி வைக்க
ஒவ்வாமை கொண்டு
ஓய்ந்து தளர்ந்ததடி . . . . .

பார்த்து ரசித்த
பார்வையின் பிம்பங்கள்
பனிபோல் மறைந்து
பகடை ஆடுதடி . . . . . . .

தூக்கம் தொலைத்து
தூங்கா விழிகள்
துக்கம் அழுத்த
துவண்டு போனதடி . . . . . . .

இமைக்க மறந்த
இமைகள் மட்டும்
இருவிழி ஜன்னலாய்
இன்னமும் நடிக்குதடி . . . . . .

எழுதத் துடிக்கும்
என்கை விரல்கள்
ஏதேதோ எண்ணி
ஏங்கித் தவிக்குதடி . . . . . .

உன்னைச் சுற்றியே
உருமாறி நினைவுகள்
உட்கார்ந்து கொண்டு
உவகைக்கு ஏங்குதடி . . . . . .

பாதி உடைந்த
பாழான இதயம்
பாவையுன் ஜதிக்காய்
பாவமாய் துடிக்குதடி . . . . .

ஆனாலும் பெண்ணே
ஆவிபிரியும் முன்னே
அபலை என்னை
அலைபோல் அணைப்பாயடி . . . . . .


*-*-*-*====*-*-*-*===*-*-*-*===*=*

எழுதியவர் : மல்லி மணியன் (8-Aug-14, 1:29 pm)
பார்வை : 259

மேலே