வானவில்
மழைக்காக...
பூமி பெண் பிடித்தக் குடைத்தான் இதுவோ...!!
-- வானவில்...
@@@@@
முழுமையாய் நனைந்துவிட்ட இவளுக்கு..
கடவுள் கொடுத்த சேலை இதுவோ....!!
--வானவில்..
@@@@@
கரு மேகங்கள் தொடுக்கும் அம்புகள் கண்டு...
இயற்கை காட்டும்..
பல வண்ணங்கள் கொண்ட..
சமாதானக் கொடி இதுவோ....!!
--வானவில்
@@@@@
உன் காதல் மழைப் பொழிந்ததும்...
என் வாழ்விலே பல வண்ணங்கள் தோன்றியது...
-- வானவில்