காதல் அழகு என்று
கயல் துள்ளும்
இனிமை மிகு
இரு விழிகள் !
கன்னக் குழிவுடன்
இசை பாடும்
புன்னகை இதழ்கள்
காதோரக் கூந்தலிழை
கலைந்து வந்து
நடம் ஆடும்
முக நிலவு
மெல்லக் கவியும்
விழி ஓரத்தில்
மெல்லிய தென்றல்
வந்து கவி பாடும்
காதல் அழகு என்று...
~~~கல்பனா பாரதி~~~