காதலாய் கவிதையாய்
செதுக்கிய சிற்பத்தில்
ஆரணங்காய் எழுந்து
நின்றாள் !
செதுக்கிய சிந்தனையில்
செந்தமிழ்க் கவிதையாய் எழுந்து
வந்தாள் !
செதுக்கிடும் கரமும்
இல்லை
சிந்தனை அலையும்
இல்லை என்னிடம்
புரிந்த புன்னகையில்
புதுக் கவிதையாய்
என் முன்னே வந்து
நின்றாய் காதலில் !
~~~கல்பனா பாரதி~~~