காதலித்த தருணங்கள்

குடை இல்லா
பேருந்து நிலையில்
உன் வருகைக்கு
கோடையிலும் மழையிலும்
காத்திருக்கும் பொழுதுகள்

காதலை சொல்ல
முடியாமல்
நீ வரும்முன்பு
தவித்து புகைக்காத
கிங்சைஸ் சிகரெட்டுகள்


நீ செல்லும் பேருந்தை
நேரத்தில் அடைய
பலநாட்கள்
நான் துறக்கும்
காலை உணவுகள்

உன்னை பார்த்த
நாள்முதல்
சுடச்சுட
வாசிக்காமல் போன
செய்தித்தாள்கள்

ஏழிலிருந்து எட்டுக்குள்...
இழந்த பாடல்
மறந்த பூஜை
பருகாத தேனீர்
வகிடாத கேசம்
போகாத பயிற்சி
எழுதாத கவிதை

எதுவுமே இழப்பில்லை .

நீ காதலித்தாலும்,
ஒருவேளை
காதலிக்காமலேயே போனாலும்.!

( பிகு - முன்பே எழுதியதுதான்.கொஞ்சம் திருத்தினேன்)

எழுதியவர் : ராம்வசந்த் (12-Aug-14, 10:47 am)
பார்வை : 106

மேலே