என் வீடு
ஓங்கி வளரும்
மரங்களுக்கு இடையே
சிறிய கோபுரம்
என் வீடு !
வந்தவர்களுக்கு எல்லாம்
தங்குமிடம் இல்லையென்றாலும்
எங்களுக்கு மன அறையில்
அதிக இடமுண்டு.....
எலிகளின் விளையாட்டு
மைதானம்
அழைக்காமலே
விருந்தில் கலந்துக்
கொள்ளும் கொசுக்கள்....
கோபுரத்தின் உள்ளே கோபுரம் அமைக்கும்
கரையான்கள்
இவர்களை எல்லாம்
எங்களுக்கு இறைவன்
கொடுத்த வரப் பிரசாதம்......