தேவை ஒரு அவதாரம்

காயைக் கனியாக்க
கார்பைட் கல்
ஆப்பிள் மினுமினுக்க
மெழுகுப் பூச்சு
அதனாலே விற்பனை
பெருகிப் போகும்

கொள்ளை இலாபத்திற்கு
கலப்படம் செய்வார்
பெரும்பணம் சேர்க்கும்
பேராசையில்
வேளாணமையைச் சிதைத்திடுவார்
வீட்டு மனைகளாய்.

ஐந்தை ஐம்பதாக்கி
உழைப்பின்றி பணம் சேர்த்து
ஊரைக் கொள்ளை அடிப்போரே
மண்ணோடு இணையும் போது
ஒருகாசும் உமதுரிமை ஆகாது

எல்லோர்க்கும் மரணம் ஒருமுறைதான்
ஏய்த்துப் பிழைப்போரைத் தண்டிக்க
இனியொரு அவதாரம் தேவை நமக்கு.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (13-Aug-14, 10:32 pm)
பார்வை : 170

மேலே