சுதந்திரநாள்
![](https://eluthu.com/images/loading.gif)
சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம்
என்று சொல்லி
கொடி ஏற்றுவோம்
விண்ணைத் தொடுவோம்
மண்ணைப் போற்றுவோம்
பண்ணைப் பாடுவோம்
கல்வி பெருக்குவோம்
கவின் மொழிகள் காப்போம்
கலைகள் பயில்வோம்
தளைகள் நீக்குவோம்
வரலாறு காண்போம்
சரித்திரம் செய்வோம்
தோழமை வளர்போம்
சாதனை படைப்போம்
சம்மதம் அடைவோம்
உரிமை கொடுப்போம்
ராணுவம் பேணுவோம்
ஒன்றென நிற்போம்
திக்கெட்டும் புகழ் நாட்டுவோம்
வாழ்க வாழ்க வாழ்க