பிச்சிப்பூ வாசத்தோடு தொலைந்துப்போ -வித்யா

பிச்சிப்பூ வாசத்தோடு தொலைந்துப்போ-வித்யா

சுற்றிலும் கொஞ்சம்
சுடுவார்த்தை
சாவகாசமாய் இளைப்பாறிநீளும்
வாழ்க்கையென
ஒவ்வொரு இரவிலும்
அவசர அவசரமாய்
அழிக்கப்படுகிறது
தோல்வியின் அத்தனைத் தடையங்களும்............!!

அவசியம் தேவைப்படும்
திரைச்சீலைகளில்
மறைக்கப்பட்ட வட்டங்களும்
வாட்டங்களும்.......புது கதை சொல்லும்..........!!

இருப்பிடங்களை வெற்றிடமாக்கி
வெற்றிடங்களை ஆக்கிரமித்து
நுரைத்து ததும்பும் உன் நினைவுகளில்
இருந்தே பெறப்படுகிறது-காதலும்
அதற்கீடான இக்கவியும்............!!

உன்னை விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயுமில்லை எனும்
எனக்கான தேற்றல்களில் நானே
சிலாகிப்பதாய் ஓருணர்வு............!!

கண்ணீரிலோ
கனவிலோ
வலியைத் தற்காலிகமாக
மறைக்கத்தெரிந்த என் கவி......
நீண்ட நாட்களுக்குப்பின்
இன்று நான் சூடிய பிச்சிப்பூவின்
வாசத்தில் தொலைந்து போகட்டும்.......!!



***********இக்கவியிலும் காதல் இல்லாமலில்லை*****************

எழுதியவர் : வித்யா (16-Aug-14, 12:28 am)
பார்வை : 191

மேலே