உறக்கம்

வெள்ளி விழுந்து இரவு கவ்வும் நேரம்
உண்டி உண்று உறக்கம் வரும் நேரம்

ஆடி ஓய்ந்து சோர்வுரும் நேரம்
பாடு அகன்று சாய்ந்திருக்கும் நேரம்

அமைதிப் பெற்று ஆழ்மனதில் இருக்கும் நேரம்
நினைவு அழுந்தப் பெற கனவு காணும் நேரம்

எங்கும் சென்று எதையும் காணும் நேரம்
கலைந்து எழுந்தால் திடுக்கிடும் நேரம்

உயிரை மறந்து உடல் உறங்கும் நேரம்
மீண்டும் எழுந்தால் காலை நேரம்

எழாவிட்டால் சாக்காடு நேரம்
எழுந்தாலோ வெள்ளிப் புறப்பாடு தொடரும் கடப்பாடு

எழுதியவர் : ரமணி (17-Aug-14, 11:08 am)
சேர்த்தது : ரமணி
Tanglish : urakam
பார்வை : 83

மேலே