காற்றில் அலையும் நேசம்
கடுகின் தலையில் வைக்கப்பட்ட
மலையின் பாரமாய்......
என்னை நினைத்து
எங்கோ வாழும் உன் ஏக்கம்
முள் வேலியிட்டும்
முந்திக்கொண்டு வந்துவிடு(ழு)கிறது
கண்ணீர் பூக்கள் ...
வானம் சுருட்டிய போர்வையானது
வராத மழையாய் ....
உன் வருகை பொய்த்தபோது...
சில நிமிடங்களில்
எதிர்ப்பார்ப்புகளை விட
ஏமாற்றங்கள் முந்திக் கொள்(ல்)கின்றன .....
துளை தப்பிய காற்றாய்
சுரமிழந்து கேட்கிறது
உன்
இதயத்தின் தேம்பலோசை...
உன்னை அடைவதற்காகவே
அலைகிறது
என் நினைவும் உயிரும்
காற்றை உயிர்க்குழல்களில் அடைத்தபடி...!!
கவிதாயினி நிலாபாரதி