கவி எழுத வைத்த கண்கள்
இருதயம்
இடமாற்றம் அடைகிறது
இருவிழிக்குள்
இவ்வளவு வசீகரமா......?
இருநொடிக்குள்
இருநூறு கேள்விகளை
தொடுக்கிறதே
இது என்ன
வேலைக்கு
தேர்ந்தெடுக்கும் தமிழக அரசின்
வினாத்தாளா..........?
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேனடி
லஞ்சம் எவ்வளவு சொல்
தந்துவிடுகிறேன்
எது எழுதினாலும் தேர்ந்தெடுத்துவிட