உன் இருதயத்தின் இருப்பிடச்சான்று
பெண்ணே -நான்
உன் இருதயத்தின்
இருப்பிடச்சான்று
பெற்ற பிறகும்
எதிரெதிரே காணும்போது
தானாக விலகிச்செல்லும்
உன் விடுகதைக்கு
விடைதேடி அலைந்தபோது
ஒரு சிறுவனின்
கையில் கண்ட
இரு காந்தங்கள்
விடை சொன்னது
ஒரே துருவங்களை கொண்ட
இரு காந்தங்கள்
விலகுவது போல
ஒரே எண்ணங்களை கொண்ட
இரு இதயங்கள் விலகுவதும்
இயல்புதானே ...
விடை தெரிந்தபின்
இணைவதற்கு ஏற்ப
எண்ணங்களை மாற்றுவதும்
சுலபம்தானே .......