இதுதான் காதலா - நாகூர் லெத்தீப்

யுத்தமின்றி
வன்முறை சிறு
ஊடலும் தேடலும்............!

அன்பாலே
இம்சை சப்தபின்றி
அகிம்சை..........!

இதயங்களின்
திருட்டு
தொடரும் நாடகம்.........!

பொய்களை
மெய்களாக
சித்தரிக்கும் பருவம்.......!

அறியா வயது
அதிசய உணர்வு
காதலினால்......!

மனதை இடம்
மாற்றும் நிகழ்வு
புதிய உறவு.........!

மகிழ்வான
பேச்சு ஒரே மூச்சு
இருவர் பேச்சு......!

புரியாத உறவு
மனதால்
இடைமாறும் நிகழ்வு.......!

உயிர் பிரிந்தாலும்
வாழும் உயர்வான
இரு உள்ளம்.......!

காலத்தை
வெல்லும் புது
வேகத்தில் செல்லும்.........!

உருவம் காணாது
உயிரை மட்டும்
காணும் உண்மை........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Aug-14, 11:00 am)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே