எனது உயிரை தருவேன் என் தோழிக்கு 555
தோழி...
என் மனதின்
எண்ணங்களை...
என் முகம் பார்த்தே
தெரிந்து கொண்டவள்...
எனக்கே தெரியாத என்
திறமைகளை வெளியே
கொண்டு வருபவள்...
உலகுக்கும் எனக்கும்
தெரியாத உண்மைகளை
தெரிந்தவள்...
என்னைவிட என்னைப்பற்றி
முழுவதும் அறிந்தவள்...
பலனை பாராமல் பல
நன்மைகளை புரிபவள்...
பாசம் காட்டுவதில் என்
அன்னைக்கு நிகரானவள்...
தவறான பாதையில்
செல்லுமுன் தடுப்பவள்...
என் தவறினை சுட்டி காட்டி
தண்டிக்க தெரிந்தவள் [துணிந்தவள்]...
நான் எடுக்கும் முயற்சிகளுக்கு
புத்துணர்ச்சி கொடுப்பவள்...
என் வாழ்வின் வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய் இருப்பவள்...
என் நம்பிக்கையின் மொத்த
உருவம் அவள்...
பெரும்பகுதி பள்ளி,கல்லூரி
நாட்களில் என்னோடு கழித்தவள்...
எத்தனை முறையேனும்
எனது உயிரை தருவேன்...
இத்தனை சிறப்பு மிக்க
என் உயிர் தோழிக்கு.....