நல்லை நல்லூரான்
யுத்தத்தின் சத்தங் கிட்ட வந்தபோதும்
ஆறு கால பூசை நடந்த அந்த
நாட்களை இப்பொது நினைக்கின்றேன்
இப் போது நினைத்தாலும் மெய்
சிலிர்கிறது
வேற்று இனத்தவர்களாலும் போற்றப்படும்
இன் நல்லை நல்லுறான் எம் இனத்தை
மட்டும் விட்டு வைக்கவில்லை
எம் தானைத் தலைவன் முன்னிலையில்
திலீபன் அண்ணா எடுத்துக் கொண்ட சத்தியமே
என் கண் முன்னே நிற்கிறது
அப்போது எனக்கு வயது ஐந்து
எனது தந்தையார் என்னைத் தூக்கி
வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன்
அவ்வளவு சனத் திரள் மத்தியில் திலீபன்
அண்ணாவுக்கு என்னை தெரிந்திருக்குமோ தெரியாது
நான் என் உடலை வளைத்து நெளித்து
திலீபன் அண்ணாவை பார்த்தேன்
எனக்கு திலீபன் அண்ணா தெரியவில்லை
அவர் படுத்த படுக்கையாய் இருந்தார்
பத்து நாட்கள் அந்தப் பத்து நாட்கள்
மனமதில் நீங்க மறுக்கின்றன
எப்படி மறப்பது?
எதை மறப்பது?
மனமதில் ரணமான அந்த நாட்களை
என்ன செய்து மறக்க வைப்பது?
என்ன ஆறுதல் உண்டு?
இருந்தும் பல தடைகள் தாண்டி
பல கரடு முரடான பாதைகள்
பல தாண்டி எம் தானைத் தலைவன்
பாதையில் நடக்கின்றோம்.
எமக்கும் விடியல் உண்டு எனும்
நம்பிக்கையில்.