சற்று இனிமையாக

ஈரமான சிமன்ட் தரை
கால்பதிக்க்காமல் செல்கிறது தென்றல்

ஓரமாக இருந்தாலும்
ஓயாமல் ஆடுகிறது கிளை

ஜன்னல் வைத்த சிலந்தி கூடு
ஊஞ்சல் கட்டாமலே ஆடுது வண்டு

வண்ணம் காட்டிய வானவில்லுக்கு
வணக்கம் சொல்லாமலே செல்கிறது புறாக்கள்

எட்டி பார்க்க ஆசைபடுகிறது ஆத்தில் மீன்
கொத்தி கொண்டு செல்ல நினைக்கிறது வானில் கொத்தி

எழுதியவர் : காந்தி (18-Aug-14, 9:39 pm)
Tanglish : satru enimayaaga
பார்வை : 123

மேலே