என்னவளுக்கு எழுதும் மடல்
என் எண்ணமெல்லாம்
எழுத்து ஆக்கியவன்
என்னவளை
எழுத்து ஆக்குகிறேன்
அணுக்களாய் இருக்கிறாய்
என் அகத்தினிலே
தென்றலாய் வருடுகிறாய்
என் புறத்தினிலே
யோசிக்க கற்று தந்தாய்
கவிஞன் ஆகினேன்
நேசிக்க கற்று தந்தாய்
உன் கணவன் ஆகினேன்
என்னை நேசிக்கும்
உன் இதயத்திற்கு
பரிசாய்
உன்னை
அளவுக்கு அதிகமாய்
நேசிக்கும் என் இதயத்தை
பரிசாய் தந்தேன்
நம் திருமணத்திற்கு
பிறகு தான்
உணர்கிறேன்
நீயில்லாமல்
இது வரை
என் வாழ்வின் வெறுமையை
நீ தான் மனைவி என்று
உன்னை பார்க்கும் முன்னே
என் இதயம் சொன்னது
பார்த்த பொழுது
என் கண்களும்
ஆமாம் என்றது
உன் சிரிப்புக்கு காரணம்
நான் தான்
என்ற சந்தோசம்
உன் அழுகைக்கு காரணம்
நான் தான்
என்ற வருத்தம்
இரண்டும் இருக்கிறது
என் இதயத்தில்
இன்று நீ
உன் வயிற்றில்
சுமப்பது
மகனோ
மகளோ
ஆனால்
என் இதயத்தில்
நான் என்றும்
சுமப்பது
உன்னை மட்டும் தான்
உலகின் எந்த பகுதியிலும்
இருப்பேன் உன் நினைவோடு
தள்ளாடும் வயதிலும்
கை கோர்த்து நிற்பேன் நான் உன்னோடு