யாருமற்றவளின் யாதுமாகிய ஆறுதல்
யாருமற்றவளின் யாதுமாகிய ஆறுதல்
ஆறுதலுக்கு பற்று இன்றி
இருக்கும்போது நான் இருக்கிறேன் என
எங்கிருந்தோ வந்து எனை வருடி
சுமைகுறைத்து செல்கின்றது காற்று..
கோபத்தின் தகிப்பில் நானிருக்க
நான் இருக்கிறேன் என
மேளதாளத்துடன் என்னை நனைத்து
அணைத்து செல்கின்றது மழை ..
கண்களில் மிரட்சியுடன் நான்
கலங்கிநிற்க நான் இருக்கிறேன் என
சுகந்தத்தோடு கண்களுக்கு விருந்தாகி
கலக்கம்தீர்த்து செல்கின்றன பூக்கள் ..
தனிமையில் நான் இருக்கும்வேளையில்
உற்ற தோழியாய் என்மனம் புகுந்து
எண்ணங்களில் வண்ணம் கூட்டி
இனிமையாக்குகின்றது இசை ..
இயற்கை அன்னையின் அரவணைப்பில்
வந்தும், போகும் மனிதர்களின்
உறவுகள் பற்றிய நினைவு
அறவே மறந்து போகிறது...
- வைஷ்ணவ தேவி