பிடிக்குமென சொல்லவா பிடிக்காதென சொல்லவா

உன் அழகு முகத்தை காட்டும் - உடனே
உன் நினைவுகளையும் கூட்டும்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
அந்நிலவை....!

உன் சலசலப்பு பேச்சு கேட்கும் - உடனே
என் சங்கடத்தை வீசி போகும்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
அவ்வருவியை...!

உனக்கான வேண்டுதல் நினைவிற்கு வரும் - உடனே
அது வேதனைகளையும் வரமாய் தரும்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
அக்கோவிலை...!

என் கனவில் வருகிறாய் - உடனே
என்னை கலங்கவும் வைக்கிறாய்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
என் தூக்கத்தை...!

என்னை அழ வைக்கிறாய் - உடனே
நீ சிரிக்கவும் வைக்கிறாய்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
உன் அன்பை...!

நீ அழுக்காய் தெரிகிறாய் -உடனே
ரொம்ப அழகாகவும் தெரிகிறாய்...
பிடிக்குமென சொல்லவா...
பிடிக்காதென சொல்லவா...
உன்னை....!!

எழுதியவர் : மணிமேகலை (20-Aug-14, 9:11 pm)
பார்வை : 327

மேலே