நிலாவை தேடி
நட்சத்திரங்களோடு..
என் நடைபயணம்.!
தனிமையில் நீளும் இரவில்..
நிலவினை தேடி..!
பாதைகளை மறந்த...
பாதங்கள்..!
முகவரி தெரியாமல் அலைகிறது..
அதன் முகம் பார்க்க..!
நண்பனின் அன்போடு..
இருசக்கர வாகனமும்..!
காதுகளுக்குள் அடங்கிய
ஒலிபெருக்கியில்..
அமுத கானமும் உடனான பயணம்...
சுகமான ஏமாற்றத்தின் முடிவில்..!
நிலவினை நினைத்து..
உறங்கிய கண்கள்..!
சுடும் ஒளியில் நனைந்து..
முழித்துகொண்டது..!
மறுநாள் மதிய வேளையில்....!