பார்வை
குப்பை பொறுக்குவதை தப்பாய்,
பார்க்கிறதே இந்த சமுதாயம் !
சட்டையை கிழித்துக்கொண்டு,
ஊனப்பட்டதாய் பொய் பரப்பி,
பிச்சை எடுக்கவில்லையே,
உழைத்துத்தானே பிழைக்கப்பார்க்கிறேன் !
உதவிகள் வேண்டாம் உஷ்ணமாய்ப் பார்க்காதீர் !
பாடுபடத்தெரிந்தவர்க்கு கேடுகள் கிடையாது !!