பெரியோரை உண்டது கேளாமை நன்று - ஆசாரக் கோவை 86

உண்டது கேளார் குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார் புல்லரையும்
உண்டது கேளார் விடல். 86 ஆசாரக் கோவை

பொருளுரை:

மனம் வேறுபடாத அறிவுடையவர் ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால்,
கண்ட பொழுது அவர்களை நோக்கி நீங்கள் உண்டது யாதெனக் கேட்க மாட்டார்.

அதுபோல நம்மினும் எளியோரையும் தாங்கள் உண்டது யாதென்று வினவாது
விட்டு விடுங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Aug-14, 5:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே