பேயாய் திரியத்தான் வேண்டுமோ

யாருமற்றத் தனிமையில்
எத்தனை நாள் வெற்றுச் சுவர்களுடன்
காலம் கழித்திருப்பேன்
சத்தியமாய் நினைத்ததில்லை -இன்று
சுவர்களும் வெட்கப்படுமளவிற்கு
நான் காதலால் மிதந்து கொண்டிருக்கிறேன்!

வருடம் பல ஓடியும்
வாலிபம் தடுமாறாமல்
உனக்காக காத்திருந்தேன்
இனிமேலும் தனிமையின்
துயரத்தை பொறுக்க முடியாமல்
பணம் ஒன்றே துணையென்று
வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
வை என்று உள்மனம் குட்டு வைக்கிறது !

எப்படிச் சொல்வேன் மனமே
பொல்லாத உலகத்திற்கு
நாம் வாழ வந்ததே
பணம் தேடி பொருள் தேடி
எல்லாம் தேடித் தேடி
இறுதியில் சாகும்போதும்
ஒற்றை ரூபாயை
எடுத்தே செல்கிறோம் !

எவன் வகுத்த வாழ்விது
எதற்காக இப்படியொரு எந்திரவாழ்வு
எமன் வந்து இட்டுச் செல்லும்வரை
எத்தனையோ போராட்டம் -இந்தப்
பொல்லாத பூமியில் போய்ச் சேரும்வரை
வாழும்போதே பேயாய் திரியத்தான் வேண்டுமோ ????


ஹரி....

எழுதியவர் : (24-Aug-14, 12:09 pm)
பார்வை : 57

மேலே