அவளின் காதல்

முதல் முத்தம் கொடுத்து
தொடங்கியது அவளின்
காதல் என் வாழ்கையில் !

நான் உறங்கிய போதும்
என்னை பார்த்து கொண்டே
உறங்க மறந்து தூக்கம்
தொலைத்தவள் !

நான் சாப்பிட்ட எச்சில்
உணவில் சுவை குறைந்து
விட்டபோதிலும் அமிர்தமென
உண்டவள் !

யார் பேச்சுக்களை கேட்க
மறுத்தாலும் நான் பேசும்
தேவையற்ற உளறல்களை
ரசித்தவள் !

கண்ணாடியை போன்று
என் புன்னகைகளை எல்லாம்
கண்டு புன்னகைத்த
தேவதையவள் !

என் கண்ணீரை துடைத்துவிட்டு
அவள் அழுகைக்கு காரணம்
தெரியாமலே கண்ணீர்
சிந்தியவள் !

சோதனை எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து காத்து
என்னை அணைத்துக்
கொண்டவள் !

நான் செய்தது எத்துனை
பெரிய தவறாயினும்
மன்னித்து ஏற்று அறிவுரை
செய்தவள் !

நான் பிரிய நேர்ந்தாலும்
என்னை பிரியமுடியாமல்
என்றும் உண்மையாகவே
வாழ்பவள் !

என் உறவிற்கு பின்னால்
அத்தனை சொந்தங்களையும்
அவள் உலகத்தில் ஒதுக்கி
கொண்டவள் !

தெய்வங்கள் கூட அவள்
உருவில் மறைந்தே நம்
அருகில் வாழ்கின்றது
" அன்னையாக"

இன்று என் தேவதைக்கு
வயதாகி விட்டது - அட
காலத்தின் விந்தை இன்று
அவளும் என் குழந்தை !

எழுதியவர் : சிவசங்கரி (25-Aug-14, 10:59 am)
சேர்த்தது : sivashankari
Tanglish : avalin kaadhal
பார்வை : 124

மேலே