அம்மா
அம்மா அம்மா மூன்று எழுத்தில்
முதல் அறிமுகமான முகவரி அம்மா
மொழி அறியா மாடும் உச்சரிப்பது
அம்மா ம்மா நம்மை ஈன்றெடுத்தவளும்
அன்னைநம்மை தாங்கி இருப்பவளும்
அன்னை பூமிஅன்னை
அன்னை அவள் அகிலமடா அகிலமது
அவள் உள்ளங் கையிலடா
அறிவு மங்கிய அன்னை உன்டு
அன்பு இல்லாத அன்னை இல்லை
அழகு குறைந்த அன்னை உன்டு
அரவணைக்காத அன்னை இல்லை
அன்னை மடி வழியே வந்து மண்ணின்
மடியில் மடியும் வரை மாற்றம் காணாத
உறவு எதுஅதுதான் அம்மா..அம்மா
அம்மா அம்மாதான்