கனவுகள் பலவிதம்
கனவுகள் பலவிதம்
என் காதலும் ஒருவிதம்
கனவிலே நடந்திடும்
காதலும் புதுவிதம்
காலையில் கலைந்திடும்
நினைவினில் மறந்திடும்
தினம் தினம் காதலில்
புது காட்சிகள் கிடைத்திடும்
கனவு காதலில்
என்றுமே தோல்வி இல்லை
கனவை நான் காதலிக்க
அனுமதி தேவையில்லை
எண்ணங்கள் அரங்கேறும்
வண்ண கனவுகள் வந்திடும்
கனவு வண்ணமா இல்லையா
என்ற எண்ணமே மிஞ்சிடும்
கனவுகளை காதலிக்கிறேன்
இரவுகளை ஆதரிக்கிறேன்
கவிஞன் நான் என்பதால்;
கனவை தினம் யாசிக்கிறேன்