முக புத்தகம் face book
முகமும் நிஜமில்லை
மனித மிருகம் அலையும் வலை
அருங்காட்சியகம் தேவையில்லை
உண்மைகள் உண்மையாய்
இருப்பதில்லை என்பதே என் கவலை
கனவின் உருவங்களாய்
காமத்தின் வடிகாலாய்
காதலின் தேடல்களாய்
கள்ளதொடர்பின் நிழல் உலகாய்
நட்பிலும் வேஷமுண்டு
பாசமும் போலிஎன்று
உறவுகள் பரிமாறும்
நாடகம் அரங்கேறும்
வேலையின் நடுவேதான்
இந்த நாடகம் அரங்கேறும்
சிலர் மானமும் பறிபோகும்
உயிர் களவும் அரங்கேறும்
களவும் குற்றமில்லை
காமமும் குற்றமில்லை
தானாய் திருந்தாவிடின்
முடிவு இதற்க்கு இல்லை