அன்புள்ள நியந்தாவுக்கு 3

கண்களில் பயம் கண்ணீராய் உருண்டு திரண்டு நின்றது எனக்கு.....
அது ரத்தமாய் இருக்குமோ என்று ஒரு நிஜம் வண்ணங்களை சிவப்பாக்கியிருந்தது......


"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.... என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்......"- சற்று முன்னால் என் உதடசைவில் இந்த பாடல் ஒரு ரூபாய் காயின் பூத்தை தேடிக் கொண்டே முணு முணுத்துக் கொண்டிருந்தது.....

ஒன்று கவனித்து இருக்கிறீர்களா......? நாம் ஏதோ ஒரு பாடலை முணு முணுத்துக் கொண்டிருப்போம்.... அதே பாடல் எங்காவது ரேடியோவில் அல்லது ப்ளேயரில் ஒலித்துக் கொண்டிருக்கும்..... நாம் நினைத்துக் கொள்வோம்... அட நமக்கு இ எஸ் பி என்று...... சில போது அதுவும் உண்டு.. ஆனால் பல போது எங்கோ ஒலிக்கும் பாடல் நம் கவனமற்று நம்முள் சென்று, நம் உதடு முணங்கி.. அந்த ஒலி நம் காதுக்குள் சென்று ஏற்கனவே காதின் வாசலில் தயாராக நின்ற ஒலியை தட்டி எழுப்பி, எங்கோ பாடல் ஒலிப்பதாக ஒரு மாய நினைவுகளை ஏற்படுத்தும்.......

என் தேடல் பூத்தை பற்றியதாக இருந்தாலும் குரங்கு மனம் தாவிக் கொண்டே இருந்தது..... அதோ அங்கு ஒரு பூத் தனியாக.... அட... வண்டியை நிறுத்தலாம் என்று முயற்சிக்க, யாரோ ஒரு ஆள் சட்டென சென்று ஒரு ரூபாயை சிவப்புக்குள் வலையமாக்க, சுற்றி சுற்றி பார்த்து விட்டு மீண்டும் வண்டியை ஓட்டத் தொடங்கினேன்....

ஏதோ எல்லாரும் என்னையே பார்ப்பது போல ஒரு மாயம் எனைத் தொடர்வதாக ஒரு நினைப்பு..... நினைப்புதானே..! என்று மீண்டும் ஒரு கடையில் நிறுத்தினேன்.... தோன்றியது..... பக்கத்தில் தேநீர் குடித்தபடி சிலர் நின்று இருந்தார்கள்.. நான் பேசுவது அவர்கள் காதில் விழுந்தால்..... பின் எப்போதாவது ஏதாவது பிரச்சினை வந்தால்.. சுலபமாக மாட்டிக் கொள்வோமே.. பைக் வேறு மஞ்சள் நிறம்.... அதுவும் இந்த மாடல் வண்டி 2002ல் எங்கள் ஊரில் எடுத்த முதல் ஆள் நான்தான்.. ஈசியாக மாட்டிக் கொள்வேன்..... வேண்டாம்.. ஆளில்லாத பூத்தைத் தேடினேன் .... இப்போது பூத்துகளும் அவ்ளவாக இல்லை.. எல்லார் கையிலும் கடலை மிட்டாய் போல செல் போன வந்து விட்டதை நொந்து கொண்டேன்....

அதோ அங்கு.... ஆம்..... மனம் விழிகளை சுற்றியது. விழிகள் வழிகளை சுற்றியது. வழிகளில் ஈக்கள் மட்டுமே கொண்டிருந்தன........ யாருமில்லை.... ஒரே ஒரு ஆள் தூரத்தில் இருந்த ஆல மரத்தினடியில் தூங்கிக் கொண்டு இருந்தான். யோசித்தேன்.. ஏனோ உள்ளம் பட படவென அடித்துக் கொண்டது.... இனி யோசித்தால் வேலைக்காகாது. ஒரு கால் பண்ண.. கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் வந்திருக்கிறேன்.... என்று முடிவெடுத்தவனாய் சட்டென இறங்கி, வண்டியை நிறுத்தி விட்டு,- சிவப்பு போன் அருகினில் ஒரு ரூபாயுடன் சென்றேன்....

இன்னும் மனதுக்குள் "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.... என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.. நீ இல்லாம........- சட்டென பாடல் திக்கி திணறியது..... போன் இருந்த கடை அடைக்கப் பட்டு இருக்க, ஒரு ஜன்னல் மட்டும் லேசாக திறந்திருந்தது கண்ணில் பட்டது.... ஏதோ முணங்கல் சத்தம்... கரக் கரக் என்று ஒரு சத்தம்... மெல்ல கண்களை இடுக்காக்கி கிடைத்த சந்தில் உற்றுப் பார்த்தேன்.. எனக்கு வாந்தி வந்தது.... தலை சுற்றியது. நன்றாக தெரிந்தது.... என் கால்கள் தரையில் நிற்காமல் மயங்கி சரிய இடம் பார்த்தன.......

குரங்கு மனம் இன்னும் ஒரு முறை நன்றாக கண்களை விரித்துப் பார்த்தது. 3 சிறுவர்கள் 14, 15 வயது இருக்கும்.... ஒரு ஆளை ஆட்டை அறுப்பது போல கழுத்து வயிறு .... எச்சிலை முழுங்கிக் கொள்கிறேன்.... ஆளுகொரு இடத்தில் கரக் கரக் என்று ரத்தம் பீச்சிட அறுத்துக் கொண்டு இருந்தார்கள்.......

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..... பாடலை மனம் ஏற்கவே இல்லை....

திரும்பினேன்.. எதிரே.....

போலிஸ்....


கவிஜி

*நியந்தா.......... நீ எங்கிருக்க?

எழுதியவர் : கவிஜி (26-Aug-14, 9:04 pm)
பார்வை : 138

மேலே