அறிந்தவனானேன்

நேசிக்க வைத்தாய்
சுவாசிக்க வைத்தாய்
யாசிக்க வைத்தாய்
இப்போது ஏன்
யோசிக்க வைக்கிறாய் ....?

காதல் கொண்டாய்
கூடல் கொண்டாய்
ஊடல் கொண்டாய்
இப்போது ஏன்
மோதல் கொள்கிறாய்...?

மோகம் கொண்டாய்
தாகம் கொண்டாய்
வேகம் கொண்டாய்
இப்போது ஏன்
மௌனம் கொள்கிறாய்...?

அன்பு என்றாய்
விரும்பு என்றாய்
நம்பு என்றாய்
இப்போது ஏன்
பெரும் வம்பு என்கிறாய்...?

செல்லம் என்றாய்
வெல்லம் என்றாய்
பவளம் என்றாய்
இப்போது ஏன்
தொல்லை என்கிறாய்...?

விளக்கம் கேட்டேன்
விலகி செல்கிறாய்
குழப்பம் கொண்டேன்
குறுகி நிற்கிறாய்...

வீதியல் யாரோ
விமர்சிக்கிறார்கள்
ஐயோ பாவம் ....
கிறுக்கல்களிடம் பேசுகிறான்
கிறுக்கனென்று...

அறிவிலி நானே
அறிந்தவனானேன்
நான் என்றோ
அவளால் ஏமாற்றப்பட்ட
பைத்தியமென்று ....!!!

எழுதியவர் : ம.கலையரசி (27-Aug-14, 3:39 pm)
பார்வை : 167

மேலே