அதிர்ச்சி நம்மையும் தாக்கும்

மூன்று மகள்களுக்குத் திருமணம்
செய்யமுடியாத ஏக்கத்தில் தகப்பனுக்கு
வந்ததோ மோசமான நெஞ்சுவலி

தீவிரசிகிக்சைக்கு அனுமதித்த வேளையிலே
மருத்துவர்சொன்னார் அதிர்ச்சியான நிகழ்வுகளை
தாங்கும்சக்தி அவர்க்கில்லை குணமாகும்வரை

எதுநடந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்
நானுரைப்பேன் பக்குவமாய் அவர்இதயம்
மிகவும் பலவீனம் எனஎச்சரித்தார்

தேறிவரும் வேளையிலே அதிர்ஷ்டதேவதை
கண்திறந்தக் காரணத்தால் விழுந்ததாம்
லாட்டரியில் அவருக்கு கோடிஐந்து

மகிழ்ச்சியுடன் ஓடிவந்த குடும்பத்தினர்
மருத்துவரிடம் தீர்ந்தது கவலையென
உற்சாகம் பொங்க எடுத்துரைத்தனர்

பக்குவமாய் நானுரைப்பேன் எனச்சொல்லி
பெரியவர் அருகில்சென்று முன்னேற்றமுண்டு
என்கேள்விக்கு பதிலளிப்பீர் என்றார்

லாட்டரியில் கோடிரூபாய் கிடைத்தால்
நீங்கள் என்னசெய்வீர்கள் எனும்கேள்விக்கு
முதல்மகள் திருமணம் முடிப்பேனென்றார்

நன்றாக சிந்தித்துப் பதில்சொல்கிறீர்கள்
கோடியிரண்டு கிடைத்தால் எனக்கேட்டார்
அடுத்தமகளின் திருமணமும் முடிப்பேனென்றார்

மருத்துவர் நன்றாக முன்னேற்றமுண்டு
சற்றேகவனமாக கேளுங்கள் கோடிஐந்து
கிடைத்தால் என்செய்வீர் எனக்கேட்டார்

சற்றேவிரக்தியுடன் அவர்சிரித்துச் சொன்னார்
மருத்துவரைய்யா அதிர்ஷ்டமில்லா ஜென்மமிது
லாட்டரிச்சீட்டு நான் வாங்கினேனென்றால்

என் அதிர்ஷ்டத்தில் முன்னும் பின்னும்
நபர்கள் ஆயிரம் பேருக்கும் கிடைக்காது
இருப்பினும் கேட்டமைக்குச் சொல்கிறேன்

கோடிஐந்து எங்களுக்குக் கிடைத்தால்
அதிலோருக்கோடி தருவேன் உங்களுக்கு
எனக்கேட்டதும் மருத்துவர் மயங்கிக்கீழேவிழுந்தார்

பிறருக்கு அதிர்ச்சி ஏற்படாமல் அறிவுரைக்கூறும்
வேளையிலே அதேஅதிர்ச்சி நம்மையும்
தாக்கும்என்பதனை புரிந்துகொள்ளுதல் நன்று

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (27-Aug-14, 8:28 pm)
பார்வை : 84

மேலே