ஏமாற்றம்
என் கண்முன்னே
தோன்றுகின்றன உன் பிம்பங்கள்
நானும் ஆவலில் அணைக்கிறேன்
காற்றைத் தவிர
யாரும் இருப்பதில்லை
என் இருக்கைகளுக்குள்
ஏமாற்றம்!
உன்னிடம் கண்ட
ஏமாற்றத்தைப் போல
உன் பிம்பத்திடமும்
ஏமாற்றம் கொள்கிறேன்
உன் காதலைப் போல
உன் பிம்பமும்
கடற்க்கரையில் தோன்றி மறையும்
காணல் நீராகி போகிறது
நான் என்ன சொல்ல ஆறுதல்
விழியோரம் வழியும்
என் கண்ணீருக்கும்
இதயத்தில் நீ இயற்றிய
காயங்களுக்கும்