வாடா மல்லி போடா என்றது

என் மலருக்கு மலர் பிடிக்கும்.
மலர் வாங்க சென்றேன்.
ரோஜாவோ ரோசத்துடன் முறைத்தது !
மல்லிகையோ மயங்கி விழுந்தது !
செவ்வந்திக்கோ கண்கள் சிவந்தது !
எல்லாம் பொறாமை.
வாடாத என் மலருக்கு, வாடும் இவைகள் வேண்டாம்.
வாடா மல்லியை எடுத்தேன்
போடா என்றது !

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 11:20 pm)
பார்வை : 62

மேலே