நித்தியம்
நித்தியம் -அறுசீர் விருத்தம்-
பத்திரம் செய்ததும் எழுத்தினிலே!
பதித்ததும் பார்த்தவர் நெஞ்சினிலே!
முத்திரை அகனின் முயற்சியிலே!
மூழ்கி எழுந்ததோ தமிழினிலே!
சித்திரம் நல்லதோ கெட்டதோ
செய்ததற் கவ்விறை காரணனே!
நித்திய மாவது நோக்கமிலை!
நேர்மை யிலாதன ஆக்கமிலை!
பத்தியம் தீயவை விட்டதுதான்!
பழகிய நல்லன சொல்வதுதான்!
சத்தியம் பொய்மையைக் கொன்றதுதான்!
சங்கடம் சோர்ந்துமே நின்றதுதான்!
கத்தியோ வார்த்தையின் கடுமைதான்!
காதலும் அதனால் கருத்ததுதான்!
சொத்தெனச் சேர்த்ததும் இல்லைதான்!
சுகமினி வாழ்க்கை முடிவதுதான்!
==++ == பார்க்க, படிக்க சந்தோஷ் குமாரின் 209434 எண்ணுக்கான கவிதையினையும் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
