விநாயகர் மாலை

மூலப் பொருளே முழுமுதற் கடவுளே
மூங்கில் இலைப் பிரியனே
மூஞ்சூர் வாகனனே
மூத்தோன் அடி பணிகிண்றேன்

வித்தகப் பெட்டகமே
ஓங்கார வடிவமே
படவரவு இடையனே
குண்டலியின் அகராதியே

தந்தக்கை எழுதுகோலனே
குந்தகம் களைபவனே
நம்பிக்கை நாயகனே
தும்பிக்கையால் வாழ்த்துபவனே

புரவியன்ன வேக எழுத்தாளனே
வியாசனை சோதித்தவனே
மா பாரத முதல் நகல் சொந்தக்காரனே
அன்னை ஒத்தப் பெண்ணை தேடுபவனே

திலகரின் கண்மணியே
இந்தியாவை ஒருங்கிணைத்தவனே
கற்பூர நாயகனே
நவஜோதியைக் காட்டிடுவாய்

எழுதியவர் : ரமணி (28-Aug-14, 7:47 pm)
பார்வை : 142

மேலே