நீ்ர்வீழ்ச்சி
உன் வீழ்ச்சியே எழிச்சி
உன் சத்தமே சந்தம்
உன் சுத்தமே பளிங்கு
உன் பந்தமே மலைகள்
ஓயாது விழுகின்றாய்
ஓயாது உழைக்கின்றாய்
அல்லும் பகலும் பார்க்காமல்
கார்மேகம் குறைந்தால் வாடுகின்றாய்
காற்றுடன் தவழுகின்றாய்
முலிகையைத் தீண்டுகின்றாய்
வஞ்சியையும் சீண்டுகின்றாய்
வஞ்சனையில்லாமல் பெய்கின்றாய்
வாணியனை வளர்க்கின்றாய்
சிற்றுண்டிச்சாலை பேணுகின்றாய்
சுற்றுலா பயணியை அழைக்கின்றாய்
அவரை ஆரப் புல்லுகின்றாய்
மடமைக்கு மருந்து கடமைக்கு எடுத்துக்காட்டு
கொடுப்பதி்ல் வள்ளல்
வளர்ப்பதில் அன்னை
தணிப்பதில் குளுமை
நதிகளின் முற்பிறவி
பறவைகளின் ரீங்காரக் கூடம்
செடி கொடியி்ன் பூவாளி
என்னே உனது பண்பு.