என் அம்மா
நீ பசியாயிருந்தும்
எனக்கு பால் ஊட்டிய பொழுதுகள் !!!
குடித்துக் கொடுமைப்படுத்திய
கணவனிடமும் காட்டிய அன்பு !!!
விதவையான பின்பும்
உழைத்த விடாமுயற்சி !!!
இருந்த கொஞ்ச சோற்றையும்
எனக்கீந்த தியாகம் !!!
நான் திட்டிய போது
தனிமையில் நீயழுத இரவுகள் !!!
எனக்கு காயம் என்றால்
உனக்கு வலித்த வலி !!!
என் மனைவியை எனக்காய்ப்
பொறுத்துக் கொண்ட பொறுமை !!!
என் பிள்ளைகள் மீது
காட்டிய பாசம் !!!
அத்தனைக்கும் உன் மரணத்தில் நான் சிந்திய கண்ணீர்த் துளிகள் ஈடாகாது !!!
எங்கே இருக்கிறாய் தாயே
உனக்கு ஈடு நீயே !!!