தீராத விளையாட்டுப் பிள்ளை
![](https://eluthu.com/images/loading.gif)
தீராத விளையாட்டுப் பிள்ளை
இந்தத் தெருவிலே என் போல
ஒரு பாவி இல்லை -அன்று
தீராத விளையாட்டுப் பிள்ளை-இன்று
தெருவிலே என் போல ஒருபாவி இல்லை
அழகுள்ள சிலை போல வந்தாள்-அவள்
அருகாமை சுகம் சேர்க்க சருகாகி நின்றேன்
பழகிங்கு பயம் என்னவென்றாள்-என்
பணம் எல்லாம் அவள் பரிசாக
கை தரிசாக நின்றேன்.
(தீராத விளையாட்டு )
நிலவென்றும் உன்மடி மீது என்றாள்
என் நினைவெல்லாம் உன்னோடு
உன் செலவென்ன என்றேன்
பனி போல் வெண் மகிழூந்து என்றாள்
முடிவில் எனைப் பணியாக்கிப் பிணியாக்கி
தன் நாயைத் துணையாக்கிச் சென்றாள்
(தீராத விளையாட்டு )
திருவோடு தனைஈந்த செல்வம் - எங்கு
சென்றாளோ தொலைந்தாளோ
வாழ்வில் வழி சொன்ன தெய்வம்.
தெருவோடு குடிவைத்த மோகம்-ஈற்றில்
தீராத வலி தந்து வந்தது ஞானம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை இந்த
தெருவிலே என் போல ஒரு பாவி இல்லை