என்பதை தவிர

உன் இதழின் ஓரம் சின்னதாய் விரியும் அந்த குறுநகை யாருக்காகவோ தெரியாது,,

என் விழியில் தொடங்கும் ஒவ்வொரு புன்னைகையும் உனக்காகவே என்பதை தவிர

உன் கரங்கள் தாங்க போவது எவளையோ தெரியாது

என் விரல்கள் தீண்டும் உரிமைஉனக்கு மட்டுமே என்பதை தவிர

உன் கவிதைகள் எவளுக்காக இசை மீட்டுகிறது என தெரியாது

என் வெற்று காகிதங்கள் கூட உன்னை மட்டுமே இசைக்கும் என்பதை தவிர

உன் பெயரின் முதல் எழுத்து எவளது உரிமையோ தெரியாது

என் பெயர் உன்னால் மட்டுமே முழுமை பெறும் என்பதை தவிர

உன் மொத்த காதலும் எவளுக்கோ தெரியாது


என் மொத்த காதலும் மிச்ச வாழ்க்கையும் உனக்காக என்பதை தவிர


மொத்தத்தில் நீ எனக்கானவனா என சத்தியமாய் தெரியாது,,

நன் உனக்கானவள் உனக்கு மட்டுமனவள் என்பதை தவிர,,,

எழுதியவர் : yazhu (29-Aug-14, 11:03 pm)
Tanglish : enpathai thavira
பார்வை : 160

மேலே